பதில் காசோலை வரையும் போது பின்பற்ற வேணடிய நடைமுறைகள்
• காசேடு, வங்கிக்கூற்றை சரிபார்த்து கொடுப்பனவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
• வங்கியில் பணம் செலுத்தப்படவில்லை என உறுதிப்பத்திரம் ஒன்றை வங்கியிலிருந்து பெறுதல்.
• பழைய காசோலையின் அடியிதழ் ரத்துச் செய்யப்பட்டு அதில் புதிய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல்.
• அதேபோன்று புதிய காசோலையின் அடியிதழிலும் பழைய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல்.
• முன்னய மாத வங்கிக்கணக்கிணக்க கூற்றிலுள்ள குறிப்பிட்ட காசோலை இலக்கத்திற்கு எதிரே புதிய காசோலை இலக்கம், திகதி என்பவற்றை சிவப்பு மையினால் எழுத வேண்டும்.
• புதிய காசோலையை எழுதும் திகதியில் காசேட்டு கொடுப்பனவு பக்க விபர பகுதியில் சிவப்பு மையினால் ரத்துச் செய்யப்பட்ட காசோலை இலக்கம், தொகை, உரிய விளக்கத்தையும் குறிப்பிடுதல் வேண்டும்.
Comments
Post a Comment